16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதால், 23 வயது காதலன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது உள்ளது. 

மதுரை மாவட்டம் நாகமலைப் புதுக்கோட்டை அருகே உள்ள கீழக் குயில்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த 22 வயதான கெளதம், அந்த பகுதியில் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

அதே போல், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். தற்போது கொரோனா காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த சிறுமி வீட்டில் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த 16 வயது சிறுமியை, 23 வயதான  கௌதம், காதலித்து வந்து உள்ளார். பதிலுக்கு, அந்த சிறுமியும் அவரை காதலித்து வந்தாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், இளைஞர் கெளதம் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, தனியாக அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில், அந்த 16 வயது சிறுமிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. 

இதனால், பயந்துபோன சிறுமியின் பெற்றோர், அந்த சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். 

அப்போது, அந்த 16 வயது “சிறுமி கருவுற்று இருப்பதாக” மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, தன்னுடைய காதல் கதைகளைப் பற்றியும், காதலனின் ஆசை வார்த்தைகள் பற்றியும், அந்த சிறுமி கூறி அழுது உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக அங்குள்ள சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர். இதில், அந்த இளைஞர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சிறுமியின் காதலன் கெளதமை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப் படி, சிறுமியின் காதலனை போலீசார் சிறையில் அடைத்தனர். 

மேலும், அந்த சிறுமிக்கு தொடர்ச்சியாகச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.