கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 16 போட்டியளார்கள் நிகழ்ச்சியின் முதல் நாளிலும் எஞ்சிய 2 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களில் ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

சமையல் கலைஞரான சுரேஷ் சக்கரவர்த்தி சக்ஸ் கிட்சன் என்ற சமையல் நிகழ்ச்சிக்கான யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி பங்கேற்ற பல இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடினார். இதனால் தாத்தா தாத்தா என சமூக வலைதளங்களில் பிரபலமாகி டாக் ஆஃப் தி டவுனில் இருந்தார். 

பிக்பாஸ் வீட்டுக்குள் என்டர் ஆகும் போதே உலகநாயகன் கமலை தனக்கு எவ்வளவு பிடிக்கும், கமல் மீது தான் எவ்வளவு மரியாதை வைத்துள்ளேன் என்பதை தெளிவாக கமலிடமே மேடையில் போட்டுடைத்தார் சுரேஷ் சக்கரவர்த்தி.

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போதும் கமலிடம் தனக்குள்ள மரியாதையை வெளிப்படுத்திவிட்டுதான் சென்றார். பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி கமலுடன் பிரசாரத்தில் பங்கேற்ற அனுபவங்களை பகிர்ந்தார்.

இந்நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவாக நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி பிரசாரம் செய்து வருகிறார். வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தியும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கழுத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துண்டு, கையில் டார்ச் லைட் என மக்களிடம் சுரேஷ் சக்கரவர்த்தி வாக்கு சேகரிக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

bigg boss suresh chakravarthy campaigns for kamal haasan mnm tn election 2021