இந்திய கிரிக்கெட்டில் தனது சுழற்பந்து வீச்சால் அனைவரையும் கவர்ந்தவர் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். இந்தி படங்களைத் தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிக்க துவங்கி விட்டார். தமிழில் இவர் ஃபிரண்ஷிப் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா முக்கிய ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் அர்ஜூன், சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு, பலரின் பாராட்டையும் பெற்றது. இந்த படத்தின் ப்ரோமோவிற்காக, விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு, வேட்டி-சட்டையில் ஹர்பஜன் சிங் நடந்து வருவது போன்ற வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. 

இந்த வீடியோ வைரலானது. இதைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலான நிலையில், தற்போது ஹர்பஜன் சிங்கும் கிரிக்கெட் வர்ணனையாளருடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி உள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடங்க உள்ளதை கொண்டாடுவதற்காக இந்த வீடியோவை ஹர்பஜன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியாவும் தற்போது வைரலாகி 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. 

ஹர்பஜன் சிங் வெப் சீரிஸ் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியானது. கிரிக்கெட் வீரர்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டுவது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக உள்ளது. கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் சியான் விக்ரமுக்கு வில்லனாக கோப்ரா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harbhajan Turbanator Singh (@harbhajan3)