இளம் பெண்ணை வேலைக்கு சேர்த்து கல்யாண ஆசை காட்டி, முதலாளி ஒருவர் கடந்த 8 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் ஜஹாங்கிராபாத் பகுதியைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவர், தனது கணவன் மற்றும் தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

இதனையடுத்து, கணவன் - மனைவி இடையே தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்துகொண்டே இருந்து உள்ளது. இதனால், தனது கணவரிடமிருந்து விவகாரத்து பெற்ற அந்த பெண், தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். 

இப்படியாக, கணவனை விட்டுப் பிரிந்து தனியே வசிக்கும் அந்த பெண்ணுக்கு, அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பண்ணையார், தன்னுடைய தோட்டத்தில் வேலை கொடுத்து உள்ளார். 

அத்துடன், அந்த பெண் வேலைக்கு சேர்ந்ததும், முதலாளியான அந்த பண்ணையார், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அவருக்கு ஆசை காட்டி, பல முறை அவரை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார் என்றும், கூறப்படுகிறது. 

இப்படியாக அந்த பண்ணையார், தன்னிடம் வேலை செய்து வந்த அந்த பெண்ணை, திருமண ஆசை காட்டி ஏமாற்றி ஏமாற்றியே கடந்த 8 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவரின் ஏமாற்று வேலைகளை நன்றாகப் புரிந்து கொண்ட அந்த பெண், அந்த பண்ணையாரை விட்டு முற்றிலுமாக விலகி இருக்கிறார். ஆனால், அந்த பண்ணையார் அந்த பெண்ணுக்கு மீண்டும் தொல்லை கொடுத்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. 

இதனால், மிகவும் பாதிக்கப்பட்ட அந்த பெண், பாதுகாப்பு கருதி அங்குள்ள காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிக் கடந்த 8 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த பண்ணையார் மீது புகார் அளித்து உள்ளார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பண்ணையாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த பண்ணையார் அந்த பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அந்த பண்ணையாரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு உள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலீசார் தற்போது பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.