விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் அபிராமி. நோட்டா, நேர்கொண்ட பார்வை, களவு ஆகிய படங்களிலும் ஒரு சில வெப்சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார். துருவநட்சத்திரம், நெருஞ்சி, தி லாஸ்ட் கஸ்டமர் உள்பட சில படங்கள் அபிராமி நடிப்பில் வெளிவர உள்ளது. மாடலிங்கில் அதிக ஆர்வம் உடைய அபிராமிக்கு இணையத்திலும் ரசிகர்கள் ஏராளம்.

தற்போது விஜய் டிவியின் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ளார்.இந்நிலையில் அபிராமியின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த சிலர், அவரது முன்னழகு குறித்து ஆபாசமாக கமெண்ட் செய்திருந்தனர். அவர்களுக்கு அபிராமி பதிலடி கொடுத்துள்ளார்.

அபிராமி தனது பதிவில் தெரிவித்திருப்பதாவது, என்னுடைய மார்பு பெரிதாக இருப்பது குறித்து பலர் கருத்து சொல்கின்றனர். ஆமா, எனக்கு பெரியதுதான். காரணம் நான் தென்னிந்திய பெண். உங்கள் தாய் இல்லாமல் இந்த உலகத்துக்கு நீங்கள் வந்திருக்க முடியாது. என்னைப் பற்றி கருத்து சொல்லும் முன் உங்கள் தாயை நினைவில் கொள்ளுங்கள். பெண்களை மரியாதையாக நடத்த கற்றுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

இது ஜனநாயக நாடு, ஆனால் வெட்கமில்லாத, மரியாதை இல்லாத நாடு இல்லை. அதனால் கொஞ்சம் உணர்வோடு பேசுங்கள், இப்படிபட்ட நான்சென்ஸ் வேண்டாம் என்று கூறியுள்ளார். பிக்பாஸ் அபிராமி. அபிராமியின் இந்த பதிவுக்கு பல நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அபிராமியின் துணிச்சலான இந்த பதிலடிக்கு பலரும் அவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

bigg boss abhirami replies to a man who commented about her breasts