சென்ற ஆண்டின் குளிர் காலத்தில் இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் மூட்ப்பட்டன. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டனர். மூச்சுத் திணறல் காரணமாக பல நோயாளிகள் மருத்துவமனைகளை நாடினர். இந்த நிலையாவும், அதிக காற்று மாசுபாடு காரணமாக ஏற்பட்டுள்ளது.

`விஷவாயுக் கூடமாக' டெல்லி இருப்பதாக பொதுவாக விமர்சிக்கப்பட்டாலும், இந்தியாவில் அதிக மாசுபாடு உள்ள நகரம் டெல்லி மட்டுமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே அதிக மாசுபாடு மிக்க ஆறு நகரங்களில் ஐந்து நகரங்கள் டெல்லியில் இருந்து 80 கிலோமீட்டர் சுற்றளவில் காணப்படுகின்றன. குருகிராம், காசியாபாத், ஃபரிதாபாத், பிவாடி மற்றும் நொய்டா நகரங்கள் உலகிலேயே மாசுபாடு மிகுந்த நகரங்கள் பட்டியலில் உள்ளன.

2018ம் ஆண்டு கிரீன்பீஸ் அமைப்பு நடத்திய ஆய்வில், உலகில் அதிக மாசுபாடு மிகுந்த நகரங்களில் 30 இந்தியாவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பான அளவு என்று தெரிவித்துள்ளதைவிட மிகவும் அதிகமான அளவில் பி.எம்.2.5 துகள்களை உள்ளடக்கிய மாசுபாடு காற்றில் இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டத இந்தியாவின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வேறு எந்த நாட்டிலும் காணப்படாத மாசுபாட்டு நிலைகளுக்கு ஆளாகின்றனர். காற்று மாசுபாடு ஒரு சராசரி இந்தியரின் வாழ்வை 5 ஆண்டுக்கும் மேலாக குறைக்கிறது. டெல்லியில் காற்று மிதமானது முதல் மோசமாக மாறக்கூடும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் "யுத் பிரதுஷன் கே விருத்" என்ற மெகா காற்று மாசு எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கினார். அதனையொட்டி, டெல்லி நகரில் காற்று மாசுபாட்டுக்கு எதிராக சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

அக்.,15 முதல் டெல்லி மற்றும் அதனை சுற்றிய நகரங்களில் காற்று மாசுபாட்டை எதிர்த்து போராடுவதற்கான கடுமையான நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும் என்று உச்சநீதிமன்ற அமைப்பு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசாங்கங்களுக்கு அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தைத் தவிர்க்க முயற்சிக்குமாறும் கூறியது. முன்னதாக நேற்று டெல்லியில் காற்று மாசுபாடு குறித்த நடவடிக்கையை கண்காணிக்க 'பசுமை போர் அறை' திறக்கப்பட்டது. பசுமை டெல்லி என்னும் மொபைல் ஆப் உருவாக்கப்பட்டு வருகிறது. இது இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.

அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில், பண்ணை தீ தொடர்பான தரவுகளும் பகுப்பாய்வு செய்யப்படும். டெல்லியின் காற்றின் தரம் புதன்கிழமை மோசமாக மாறியது, ஜூன் 29 க்குப் பிறகு முதல் முறையாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீட்டை (AQI) 215 ஆக பதிவு செய்தது. இது செவ்வாயன்று 178 ஆக இருந்தது. அதிக அளவு காற்று மாசுபாடு என்பது ஆண்டு முழுவதும் ஏற்படும் பிரச்சினையாகும், இது சாதகமற்ற வானிலை நிலைமைகள், அண்டை பிராந்தியங்களில் பண்ணை தீ மற்றும் உள்ளூர் மாசுபடுத்தல் காரணங்கள் காரணமாக இருக்கலாம்.

மாசு கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு ஆணையம் டெல்லி, ஹரியானா, உ.பி., மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் அண்டை நகரங்களான நொய்டா, கிரேட்டர் நொய்டா. காசியாபாத், பரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய, அவசரகால தேவைகளை தவிர, டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்துவதை தடை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. டீசல் ஜெனரேட்டர்களின் பயன்பாடு அனுமதிக்கப்படும் விலக்குகள் மற்றும் அவசரகால சேவைகளின் பட்டியலை EPCA விரைவில் வெளியிடும். கொரோனா தொற்றின் போது சுகாதார நிலைமைகள் ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும், மாசுபாடு அவர்களை மிகவும் ஆபத்தானதாக மாற்றுவதற்கு போதுமான சான்றுகள் உள்ளன என்றும் அது வலியுறுத்தியது.

குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு அதிக விழிப்புணர்வு தேவைப் படும். எனவே தொழில்துறை அடுக்குகள், குப்பைகளை கொட்டுதல் மற்றும் சட்டவிரோத எரிபொருட்களின் பயன்பாடு போன்ற ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டு அபராதம் விதிக்கப் படுகின்றன. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலைமையிலான பணிக்குழு மற்றும் ஈபிசிஏ ஆகியவை நிலைமையை அடிக்கடி மதிப்பாய்வு செய்து, தேவை ஏற்பட்டால் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.