எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரா நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. சக்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகி ட்ரெண்டானது. ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமில்ல, வைர் லெஸ்ஸும் ஆபத்துதான் எனும் வசனம் அம்சமாக அமைந்தது. 

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது இந்த படம். படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி தெரியவரும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் விஷால் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளார் விஷால். சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான ட்ரைலரின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியானது. 

சக்ரா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். சக்ரா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. லாக்டவுனுக்கு பிறகு துவங்கப்பட்ட இதன் படப்பிடிப்பில் இருந்து நடிகர் ரோபோ ஷங்கரின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. ஷூட்டிங் ஸ்பாட்டில் பேண்ட் அணியாமல் இருந்த ரோபோ ஷங்கரை கேமராவில் யாரோ வீடியோ எடுத்துள்ளனர். இதைக் கண்ட ரோபோ ஷங்கர், அதுக்குன்னு இப்படிலாம ஷூட் பண்ணுவீங்க என்று விளையாட்டாக கேட்டது வைரலானது. 

இந்நிலையில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் நடிகை ரெஜினா கசண்ட்ரா இணைந்துள்ளார். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சக்ரா படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என நெருங்கிய திரை வட்டாரத்தின் மூலம் செய்தி வெளியானது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடனும், படத்தை காண ஆவலுடனும் உள்ளனர் புரட்சி தளபதி ரசிகர்கள்.