தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருபவர் சமந்தா.சூப்பர் டீலக்ஸ்,ஓ பேபி,மஜிலி படங்களின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.இதற்கிடையே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் முடித்திருந்தார்.

திருமணத்திற்கு பிறகு தனக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.ஒரு வெப் சீரிஸிலும் நடித்துள்ளார் அது விரைவில் வெளியாகவுள்ளது.இவர் நடிப்பில் தயாராகியுள்ள 96 ரீமேக் திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அவ்வப்போது சமந்தா ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார்.இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவிட்டு,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும் வந்தார் சமந்தா.தனது செல்ல நாயின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார் சமந்தா.

இதனை தவிர வீட்டில் தோட்டம் அமைப்பது எப்படி என்ற கலையை கற்று வந்தார் சமந்தா,அதோடு சமயலையும் நன்றாக கற்று வருவதாக அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.யோகா செய்வது குறித்தும் சமந்தா சில புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.மேலும் வீட்டில் தோட்டம் அமைப்பது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டார்,இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.தற்போது தனது ஒர்க்கவுட் வீடியோ சிலவற்றை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.