குஜராத் மாநிலத்தில் 2 சிறுமிகள் தங்களது உறவினர்களால் தொடர்ந்து 5 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி கர்ப்பம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் 12 வயது மகள் ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். தற்போது, கொரோனா ஊரடங்கு காரனாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், சிறுமி மட்டும் தனியாக வீட்டில் இருந்து உள்ளார். 

அப்போது, அங்கு வந்த உறவினரான சுமார் 17 வயது மதிக்கத் தக்க சிறுவன், வீட்டில் தனியாக இரந்த சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட சிறுமி, அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், பயந்துபோன அந்த சிறுவன், இது பற்றி தனது 2 உறவினர்களிடம் அந்த சிறுவன் கூறியிருக்கிறான். இதனை முழுவதுமாக கேட்ட அந்த 2 பேரும், சிறுமியின் வீட்டிற்கு வந்து, அவர்களும் சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அத்துடன், “இது குறித்து வெளியே சொன்னால், உன்னைக் கொன்று விடுவோம்” என்றும், அந்த உறவினர்கள் சிறுமியை மிரட்டி விட்டுச் சென்று உள்ளனர். ஆனால், அப்படி வந்து சிறுமியை பலாத்காரம் செய்த அந்த 2 பேரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 

இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனால், பயந்து போன சிறுமியை தாயார், தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாகக் கூறியுள்ளனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளனர். அப்போது, தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார கொடுமைகளைச் சிறுமி அழுகோண்டே கூறியுள்ளார்.

இதனையடுத்து, அந்த சிறுமியை அங்குள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள், இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டனர்.  இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 சிறுவர்கள் மீதும் பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அதேபோல், குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், கடந்த 3 ஆம் தேதி 13 வயது சிறுமியை, அவரது உறவினரின் நண்பர் அழைத்து, “என்னுடைய சொல்போனில் உறவினரின் புகைப்படங்கள் உள்ளன என்றும், அவற்றை அழிக்க எனக்குத் தெரியாது, அதனால் நீ வந்து அவற்றை அழித்துக் கொடுத்து விட்டு செல்ல வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார். 

இதனை நம்பி அந்த 13 வயது சிறுமியும், குறிப்பிட்ட அந்த கிராமத்துக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது, அந்த கிராமத்தின் எல்லையிலேயே தனது இருசக்கர வாகனத்தில் அந்த சிறுமியை ஏற்றுக்கொண்டு சென்ற அந்த நபர், அங்குள்ள ஒரு மறைவான இடத்திற்குச் சிறுமியை அழைத்துச் சென்று உள்ளார். அங்கு, சென்றதும், தனது செல்போனில் உள்ள அந்த சிறுமியின் உறவினரின் சில சித்தரிக்கப்பட்ட படங்களைக் காட்டியுள்ளார். அவற்றை அழிப்பதற்குத் தான் கூறியபடி நடந்து கொள்ள வேண்டும் என அவர் மிரட்டும் தோணியில் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அந்த சிறுமியை அவர் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து, அதனையும் அவர் வீடியோ எடுத்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக, அந்த வீடியோவை அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டு உள்ளார். இது குறித்த விசயம், சிறுமியின் தாயாருக்குத் தெரிய வந்தது. இதனையடுத்து, தன் மகளை அழைத்து என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அந்த சிறுமியும், தனக்கு நடந்த பாலியல் பலாத்காரத்தைப் பற்றிக் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 21 வயது இளைஞரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்திய பிறகு, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து, அவரை கைது செய்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.