உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம், 2 குழந்தைகளின் தாயின் புகைப்படம் சிக்கிய நிலையில், அந்த படத்தை விளம்பரப்படுத்தி அந்த மோசடி கும்பல் பணம் பறிப்பதில் ஈடுபட்டு வந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, பலரும் வருமானம் இன்றி கடும் அவதிப்படும் நிலையில், அதில் சிலர் சீசனுக்கு தகுந்தார் போல் மோசடி வேலைகளைச் செய்து, அதிலிருந்து பணம் சம்பாதித்துக்கொண்டு இருக்கின்றனர்.

அதே நேரத்தில், இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் முன்பை காட்டிலும் தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்படியான ஒரு கிரைம் மோசடி தான் பாலியல் பலாத்கார குற்றங்களுக்குப் பெயர் போன உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், அங்குள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணம் ஆன நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். 

அத்துடன், தனது பணி நிமிர்த்தம் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் இருக்கம் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அவர் பதிவிட்டு வருவது வழக்கம். அப்படி அவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பாலியல் தொழில் செய்யும் கும்பலின் கையில் கிடைத்திருக்கிறது. அதனை, அந்த கும்பல் காசாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

அதாவது, நொய்டாவைச் சேர்ந்த 40 வயதான பெண், அங்குள்ள செக்டர் 49 காவல் நிலையத்தில், ஒரு அதிர்ச்சிகரமான புகார் ஒன்றை அளித்திருந்தார். 

அந்த புகாரில், “இணைய தளம் மூலமாக மோசடியாக பாலியல் தொழில் செய்யும் கும்பல் ஒன்று, என்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களான வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் பயன்படுத்தி அதில் ஒரு தொலைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டு விளம்பரம் செய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், “சம்மந்தப்பட்ட புகைப்படத்தை நீங்கள் எங்கு எப்போது பகிர்ந்தீர்கள்?” என்று கேட்டுள்ளனர். சற்று யோசித்த அந்த பெண், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன்” என்றும், அவர் கூறியிருக்கிறார்.

“இந்த சமூக வலைத்தள விளம்பர விசயம் உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது” என்று போலீசார் கேட்டு உள்ளனர்.

அதற்கு, “2 குழந்தைகளுக்குத் தாயான என்னுடைய புகைப்படத்தை இது போன்ற ஒரு மோசமான பதிவில் பார்த்து அதிர்ந்துபோன என்னுடைய நண்பர்கள் சிலரே, எனக்கு இந்த தகவலைத் தெரியப்படுத்தினர். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த நான், என்னுடைய புகைப்படத்துடன் வேறு யாருடைய நம்பரோ அதில் குறிப்பிடப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டிருந்ததையும் கவனித்தேன்” என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

மேலும், “என்னுடைய நண்பர் ஒருவரின் மூலம் அந்த எண்ணிற்கு அழைத்துப் பேசிய போது, அந்த புகைப்படத்தில் உள்ள என்னைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி ஒரு வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்புமாறு அவர்கள் கேட்டார்கள் என்றும், இதனால் அந்த மோசடி கும்பலை கண்டுபிடித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அந்த பெண் கேட்டுக்கொண்டார். 

இதனையடுத்து, அந்த பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சைபர் பிரிவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி அந்த பெண்ணை அனுப்பி உள்ளனர். 

அத்துடன், இந்த புகாரை நடைமுறைப்படுத்த 15 நாட்கள் ஆகும் என்றும் போலீசார் தரப்பில் கூறியதாகவும், பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். அதே நேரத்தில் எனது புகார் குறித்து, போலீசார் இதுவரை எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யவில்லை” என்றும், அந்த பெண் தெரிவித்துள்ளார். இதனால், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.