கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஞ்சனா படத்துக்கு பிறகு நடிகர் தனுஷுடன் இரண்டாவது முறையாக அத்ரங்கி ரே படத்திற்காக கைகோர்த்துள்ளார் இயக்குனர் ஆனந்த் எல் ராய். இந்த படத்தில் அக்‌ஷைகுமார் மற்றும் சாரா அலிகான் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். கொரோனா அச்சறுத்தல் குறைந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. 

பாலிவுட் சென்சேஷனான சாரா அலி கானை வைத்தே அத்ரங்கி ரே கதை நகரும் என கூறப்படுகிறது. படத்தில் சாரா அலி கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். படத்தின் கதை இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல காட்டப்பட்டு இருக்குமாம்.

மதுரையில் நடைபெற்று வந்த ஷுட்டிங்கை தொடர்ந்து டெல்லியில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்தது. டெல்லி படப்பிடிப்பை முடித்து விட்டு சமீபத்தில் ஆக்ரா சென்றனர் படக்குழுவினர். ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் அருகே படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. ஷாஜகான் கெட்டப்பில் அக்ஷய் குமார் வெளியிட்ட புகைப்படம் மாற்றும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது. 

கடந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டனர் படக்குழுவினர். இந்நிலையில் டெல்லி, ஆக்ரா மற்றும் அதன் சுற்று வாட்டார பகுதிகளில் நடந்து வந்த படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது என படக்குழு தெரிவித்துள்ளது. அக்ஷய் குமார் நடிப்பில் தீபாவளி விருந்தாய் லக்ஷ்மி பாம் திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து பெல் பாட்டம் படத்தில் நடித்து முடித்தார். தனுஷ் மற்றும் அக்ஷய் குமார் இருவரும் இணைந்து நடிப்பதால் மிகுந்த ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். 

படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். படத்தின் பாடல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் இசைப்புயல். விரைவில் படத்தின் டீஸர் அல்லது ட்ரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். க்றிஸ் ஈவான்ஸ் மற்றும் ரயன் காஸ்லிங்கும் இதில்  நடிக்கவுள்ளனர். உலக புகழ் பெற்ற ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்கவுள்ளனர்.