இரண்டு பெண்களை ஒருவருக்கொருவர் தெரியாமல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த கணவனை, பின்தொடர்ந்து வந்த முதல் மனைவி கண்டுபிடித்த 
நிலையில், இரண்டு மனைவிகளும் சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த வெமுலா பரசுராம் என்பவர், ஆழ்துளை கிணற்றுக்குத் துளையிடும் வண்டி ஒன்றை வாங்கி, சொந்தமாக  
வைத்திருக்கிறார். அது சார்ந்த பணிகளை அந்த பகுதியில், அவர் மேற்கொண்டு வந்தார். அவருக்கு, திருமணம் ஆன நிலையில், இரு குழந்தைகள் உள்ளனர்.

சொந்தமாக ஆழ்துளை கிணற்றுக்குத் துளையிடும் வண்டி வைத்திருந்தால், அதையே காரணமாகச் சொல்லி வேலை விசயமாக வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டு, அவர் அடிக்கடி வெளியூர் சென்று வந்தார். 

இப்படியாக, இதையே காரணமாக வைத்து அவர் வாரத்துக்கு 2 அல்லது 3 நாள்கள் வீட்டுக்கு வர முடியாது என்று மனைவியிடம் சொல்லிவிட்டு பரசுராம் சென்று வந்து உள்ளார். 

இப்படி, நாளுக்கு நாள் கணவரின் நடத்தையில் வித்தியாசம் தெரிந்ததால், அவரது மனைவிக்கு கணவன் மீது சந்தேகம் வந்து உள்ளது. இப்படியாக, கணவன் மீது மனைவிக்கு சந்தேகம் இருந்த போது சமீபத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு, கணவன் பரசுராம் வீடு திரும்பி உள்ளார். அந்த 3 மாதங்களும், அவர் எங்கே இருந்தார் என்ற எந்த தகவலும் தெரியாமல், அவர் மனைவி இருந்து உள்ளார்.

இந்த நிலையில், மீண்டும் வேலை விஷயமாக வெளி ஊருக்கு செல்வதாக தன் மனைவியிடம் கூறி விட்டு, வழக்கம் போல் கணவன் பரசுராம் சென்று உள்ளார். 

இதனையடுத்து, உடனடியாக கணவருக்குத் தெரியாமல் அவரது மனைவி, தன் கணவன் பரசுராமை பின் தொடர்ந்து சென்று உள்ளார். அப்போது, அவர் தெலங்கானா மாநிலம் கம்மாரெட்டி பகுதியில் வேறு ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அவர் நுழைந்து உள்ளார். அங்கு, அந்த பெண்ணுடன் அவர் குடும்பம் நடத்தி வருவது அந்த மனைவிக்குத் தெரிய வந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, “வேறொரு பெண்ணுடன் தனது கணவனைப் பார்த்த கடும் ஆத்திரத்தில், பரசுராமின் முதல் மனைவி, 2 வது மனைவியை அடிக்கப் பாய்ந்து உள்ளார். 

அப்போது தான், பரசுராமுக்கு ஏற்கெனவே திருமணமான விசயம், அவரது 2 வது மனைவிக்குத் தெரிய வந்தது. இதனால், அவரது 2 வது மனைவி அப்பாவியாக அங்கேயே கதறி அழுது உள்ளார். இதனால், அவரது முதல் மனைவியும் அதிர்ச்சியாகி அங்கேயே நின்று உள்ளார். 

அப்போது, எதுவுமே பேச முடியாமல் பரசுராம் அங்கேயே நின்று உள்ளார். அதன் தொடர்ச்சியாக, இரண்டு மனைவிகளும் சேர்ந்து கணவன் பரசுராமை கடுமையாக அடித்து உதைத்துத் தாக்கி உள்ளனர். இதனால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுக்க முயன்றும், அவர்கள் தாக்குவதை நிறுத்தாமல் தொடர்ந்ததால், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் என்று இருவரை திருமணம் செய்த குற்றத்திற்காக, கணவன் பரசுராமை கைது செய்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.