பைக்கில் சென்ற இளம் ஜோடியை வழி மறித்த கும்பல், கணவன் கண் முன்னாடியே அவரது மனைவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

வழக்கம் போலவே, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இந்த கொடூர சம்பவமும் நடந்து உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியினர் அந்த பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

அதே நேரத்தில், அங்கிருந்து சற்று தொலையில் உள்ள தனது பெற்றோரை அடிக்கடி சென்று அவர்கள் பார்த்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இதனை அந்த பகுதியில் உள்ள ஒரு கும்பல் நோட்டமிட்டு உள்ளது. இப்படியான சூழ்நிலையில் தான், அந்த இளம் தம்பதியினர், எப்போதும் போலவே தங்களது பெற்றோரை பார்க்க சென்று உள்ளனர்.

அதன் படி, ஆட்கள் நடமாட்டம் மற்றும் ரோட்டோர லைட் எரியாத இடத்தில் தனது மனைவி உடன் அந்த கணவன் ஓட்டி வந்த பைக் வந்த போது, அந்த பகுதுியைச் சேர்ந்த மர்ம கும்பல் ஒன்று, வழி மறித்து நின்று உள்ளது.

இதனையடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் அந்த கணவனைத் தாக்கிய அந்த கும்பல், அவரது மனைவியையும், அங்கிருந்து சற்று தொலையில் உள்ள ஒரு காட்டுப் பகுதிக்குத் தூக்கிச் சென்று உள்ளனர். அங்கு, அந்த பெண்ணின் கணவனை ஒரு மரத்தில் கட்டி வைத்த அந்த கொடூர கும்பல், அந்த கணவனின் கண் முன்னாடியே அவரின் மனைவியை அந்த மர்ம நபர்கள் 3 பேர் நேர்ந்து மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மரத்தில் கட்டிப்போடப்பட்டிருந்த கணவன், இந்த காட்சியைக் காண முடியாமல் தனது கண்களை மூடிக்கொண்டு, கண்ணீர் விட்டு அழுது துடித்து உள்ளார்.

பாலியல் இச்சையெல்லாம் தீர்ந்த பிறகு, அந்த கொடூர கும்பல் அந்த பெண் அணிந்திருந்த நகைகளை எல்லாம் பறித்துக் கொண்டும், அந்த கணவனிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு, அந்த தம்பதியை அப்படியே அந்த காட்டிலேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடி விட்டனர்.

இதனையடுத்து, எழவே முடியாமல் எழுந்து நடந்த அந்த பெண், தனது கணவனின் கட்டை அவிழ்த்து விட்டு, அங்கேயே ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக்கொண்டு அழுது துடித்துள்ளார்கள். 

அத்துடன், அந்த காட்டுப் பகுதியை விட்டு வெளியே வந்த அந்த தம்பதியர், அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய அந்த மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். 

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை, போலீசார் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், இது தொடர்பாக போலீசார் தனிப் படை அமைத்து பலாத்கார குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.