உத்தராகாண்ட்டில் யோகா பயில்வதற்காக வந்த அமெரிக்க பெண்ணுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 37 வயதான பெண்மணி ஒருவர், யோகா கற்றுக் கொள்வதற்காக இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகருக்கு வந்து உள்ளார்.

ரிஷிகேஷ் நகரில் ஒரு வீட்டில் தங்கி இருந்து யோகா கற்றுக்கொண்டு அவர் வந்தார். அப்போது, யோகா பயிற்சி தெரிந்த உள்ளூரைச் சேர்ந்த ஒருவர், அந்த அமெரிக்க பெண்ணிடம் நட்பாகப் பேசி பழகி வந்துள்ளார்.

இந்த நட்பின் பழக்கத்தால், அந்த அமெரிக்க பெண்ணை தன் வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு தொடர்ந்து அவர் அழைத்துக்கொண்டு இருந்து உள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு ஏதோ ஒரு வித தயக்கம் இருந்ததால், அந்த அமெரிக்க பெண், அந்த நபரின் வீட்டிற்கு விருந்துக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி அமெரிக்க பெண் தங்கியிருந்த வீட்டு பால்கனி வழியாக அந் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த அந்த நபர், வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்த அந்த பெண்மணியை பாலியல் தொல்லை கொடுத்து, பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அவரிடமிருந்து விடுபட்டு, அவரை சத்தம் போட்டு விரட்டி உள்ளார். இதனால், அந்த நபரும் அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டார். இதனையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண், அந்த நபர் மீது புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த நபர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், “எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் தந்தை, தன் மகன் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று, எனக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும்” பாதிக்கப்பட்ட அமெரிக்க பெண் கூறியுள்ளார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், மார்த்தாண்டம் அருகே பலசரக்கு கடைக்குப் பொருள்கள் வாங்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு பகுதியைச் சேர்ந்தவர் 65 வயதான நேசமணி, அந்த பகுதியில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி விட்டு, ஓய்வு பெற்ற நிலையில், அதே பகுதியில் ஸ்ரீ சிவசக்தி என்கிற பெயரில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வருகிறார். 

இந்நிலையில், நேசமணி கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், மளிகை பொருள்கள் வாங்க வந்து உள்ளார். அப்போது, அந்த சிறுமியை கடைக்குள் அழைத்த நேசமணி, அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், பயந்து போன அந்த சிறுமி அழுதுகொண்டே வீடு திரும்பி உள்ளார். வீட்டிற்கு வந்ததும், அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்துக் கூறி அழுது உள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், முதியவர் நேசமணியின் கடையை முற்றுகையிட்டு, கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதனையடுத்து, நேசமணியை குழித்துறை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.