5 வயது மகன் முன்னிலையில் தாயை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த மர்ம கும்பல் ஒன்று, தாயோடு சேர்த்து மகனையும் ஆற்றில் தூக்கி வீசிய கொடூரச் செயலில் ஈடுபட்டதால், அப்பகுதி மக்கள் கடும் பீதியடைந்து உள்ளனர். இதில், அந்த சிறுவன் உயிரிழந்தான்.

உலகின் எந்த ஒரு பகுதியில் நடைபெறாத மிகவும் மோசமான பாலியல் பலாத்கார சம்பவங்கள் எல்லாம், மிகவும் கொடூரமான முறையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. ஆனால், இந்த முறை நாட்டு மக்களே கண்டு அஞ்சி நடுங்கும் வகையில் நடந்துள்ள இந்த பாலியல் பலாத்கார கொடூரம் பீகார் மாநிலத்தில் தான் அரங்கேறி உள்ளது.

பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில், கணவனை பிரிந்த இளம் பெண் ஒருவர், தனது 5 வயது மகனுடன் தனியாக வசித்து வந்து உள்ளார். அந்த பெண், தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட அப்பகுதியைச் சேர்ந்த மர்ம நபர்கள் சிலர், நேற்று இரவு நேரத்தில் அதிரடியாக அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, அந்த பெண்ணை கடுமையாகத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளனர். ஆனால், அந்த கும்பலிடம் அந்த பெண் கடுமையாகப் போராடி உள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண்ணின் 5 வயது மகனைத் தாக்கி, அந்த பெண்ணை தங்களது ஆசைக்குப் பணிய வைத்துள்ளது அந்த வெறிபிடித்த கும்பல். அந்த பெண், தனது மகனின் உயிரை காப்பற்ற தன்னையே இழக்கத் துணிந்த நேரத்தில், அந்த 5 வயது சிறுவன் முன்னிலையிலேயே அந்த தாயை வெறிபிடித்த அந்த மிருக கும்பல், மாறி மாறி வெறித் தீர கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். தாயை அந்த கும்பல் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்யும், இந்த காட்சிகளை எல்லாம் அந்த 5 வயது சிறுவன் அழுதுகொண்டே பார்த்துக்கொண்டு இருந்துள்ளான்.

பாலியல் காம இச்சைகள் எல்லாம் அந்த மிருகங்களிடம் தீர்ந்து போன பிறகு, “இவர்களை உயிரோடு விட்டால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று முடிவு செய்த அந்த கொடூர கும்பல், கொடூரத்தின் உச்சமாக பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு, அந்த பகுதியில் இருக்கும் ஆற்றில் அந்த பெண்ணையும், அவரது 5 வயது மகனையும் தூக்கி வீசி உள்ளது. அதன் பிறகு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி உள்ளது. 

இந்த கொடூர சம்பவத்தில், தூக்கி வீசப்பட்ட வேகத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அந்த 5 வயது சிறுவன், மிகவும் பரிதாபமான முறையில் உயிரிழந்தான். ஆனால், கடுமையாகத் தாக்கப்பட்டுக் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அந்த பெண், உடல் சோர்வான எழுவே முடியாத அந்த நிலையிலும் கூட ஆற்றில் தன் மகனைத் தேடித் தேடி மீட்கப் போராடி உள்ளார். ஆனால், கடைசி வரை தன் மகனை உயிருடன் அந்த தாயால் மீட்க முடியவில்லை.
 
இது தொடர்பாக, அங்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த பெண் அந்த காம வெறிபிடித்த கும்பல் மீது புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், முதலில் அந்த பெண்ணை அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்க, அந்த பெண்ணுக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக ஆற்றில் வீசப்பட்ட அந்த 5 வயது சிறுவனை சடலமாக மீட்ட போலீசார், அந்த உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து, அங்குள்ள தும்ராவன் டி.எஸ்.பி. கே.கே.சிங் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் மட்டும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் தற்போது தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரிடம் முழுமையாக விசாரணை நடத்திய பிறகே, அடுத்தகட்ட விசாரணை பற்றிய முழு விபரங்களும் தெரிய வரும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, 5 வயது மகன் முன்னிலையில் தாயை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து மர்ம கும்பல் ஒன்று, தாயோடு சேர்த்து மகனையும் ஆற்றில் தூக்கி வீசியதில் அந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.