நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

Arjun

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும் உருமாறிய ஒமைக்ரான் பற்றிய அச்சம் இன்னும் இருந்து கொண்டுதான் உள்ளது. மேலும் ஒமைக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமைக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான்வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது.  

இந்நிலையில் ஒமைக்ரான்உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

அதனைத்தொடர்ந்து  நாடு முழுவதும் கொடிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறைந்து வந்தாலும். வைரஸ் தொற்றுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் அர்ஜூனுக்கு தற்போது கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவார சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில் நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அர்ஜூன் இன்ஸ்டாகிராமில்  பதிவில் கூறியதாவது: நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.நான் நலமாக உள்ளேன். தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். ராம பக்த ஹனுமான் கி, ஜி! என்று இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார் நடிகர் அர்ஜுன்.