உக்ரைன் எல்லையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ரஷ்யாவைத் தாக்க அமெரிக்கா தயராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 18 வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகள் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது.  அது முதல் தற்போது வரை உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி ரஷ்ய படைக் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் தான், “உக்ரைனை ரஷ்யா ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது என்றும், உக்ரைனுக்கு அமெரிக்காவும் பிற உலக நாடுகளும் ஆதரவாக இருப்பதாகவும்” ஜோ பைடன் நேற்றைய தினம் காட்டமாக தெரிவித்திருந்தார்.

அத்துடன், “உக்ரைன் மீது ரஷ்ய படைகள் ஒருவேளை ரசாயன ஆயுதங்கள் பிரயோகித்தால், அதற்கு அந்நாடு மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டி வரும்” என்றும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மிக கடுமையாக எச்சரித்து உள்ளார்.

குறிப்பாக, ““நேட்டோ நாடுகளுக்குள் பிரிவினை ஏற்படுத்தும் முயற்சியில் ரஷ்ய அதிபர் புடின் தோற்று விட்டதாகவும், உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பாவில் உள்ள தங்கள் கூட்டணி நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கப்போவதாகவும்” ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் தான், நேட்டோ படைகளின் துருப்புகள் ரஷ்யாவின் அண்டை நாடான நார்வேயில் குவிக்கப்பட்டு வருகின்றன. 

அதன் படி, உக்ரைன் தலைநகர் கீவ் மீது மிக கடுமையான தாக்குதலை ரஷ்ய படைகள் நடத்தி வரும் நிலையில், கீவ் எல்லையில் இருந்து சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் நேட்டோ படைகள் குவிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படியாக, உக்ரைன் எல்லை பகுதியில் நேட்டோ படைகள் குவிக்கப்பட்டு வருவதற்கான காரணம், “நேட்டோ உறுப்பு நாடுகளின் பயிற்சித் திட்டம் என்றும், முன்பே இது குறித்து திட்டமிட்ட வரையறையின் கீழ் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. 

ஆனால், உக்ரைன் எல்லையில், “நேட்டோ படைகளின் குவிப்பு 3 ஆம் உலகப் போருக்கு வழி வகுக்கும்” என்றும், உலக வல்லுனர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளனர்.

இந்த விவகாரம் பற்றிய பேசிய நார்வே பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், “நார்வே மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்காக பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும், நார்வேயின் நட்பு நாடுகளின் பலத்தை வலுவூட்டும் வகையில், இந்த பயிற்சியை மேற்கொள்கிறோம்” என்றும், அவர் கூறியுள்ளார்.

“நார்வேயில் 27 நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் துருப்புகள், 200 விமானங்கள், 50 கப்பல்கள் குவிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த துருப்புகள் கோல்ட் ரெஸ்பான்ஸ் 2022 என்ற, பயிற்சியில் பங்கேற்கும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும், மார்ச் 14 ஆம் தேதியான நாளை தினம் தொடங்கும் இந்த பயிற்சியில், மேற்கத்திய நாடுகள் தங்கள் போர் திறன்களை மேம்படுத்தும் என்றும், அப்போது உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அதன் வியூகங்கள் இருக்கும்” என்றும், அங்கிருந்து வரும்  தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன், அண்டை நாடுகளான ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகியவை அதிகாரப்பூர்வமாக ராணுவ பயிற்சியில் அணி சேராத நாடுகளாக இருந்தாலும் கூட, இந்த பயிற்சியில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அந்த வகையில், 3,800 துருப்புகளுடன் அமெரிக்க வீரர்கள் நேட்டோவிற்கு ஆதரவாக கிழக்கு ஐரோப்பாவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளனர் என்றும்,  இவர்களும் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர் என்கிற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

இது தொடர்பாக நார்வேயில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், “உக்ரைனின் எல்லைகளுக்கு அருகே நேட்டோ நாடுகள் ராணுவ பயிற்சிகளை மேற்கொள்வதால், எங்களது அவர்களின் பாதுகாப்பிற்கு உதவாது” என்று தெரிவித்தார். 

அத்துடுன், “ஏற்கனவே, உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடங்குவதற்கு முன்னதாக, ரஷ்ய - உக்ரைன் எல்லையில் போர் பயிற்சியில் ஈடுபட்டன” என்றும், அவர் கூறினார்.

அந்த வகைியல், “சுமார் ஒரு லட்சம் வீரர்கள் அந்த பயிற்சியில் பங்கேற்றதாக கூறப்பட்டது என்றும், அந்த வகையில் தற்போது நேட்டோ படைகள் நார்வேயில் குவிக்கப்பட்டு வருவதால், ரஷ்யாவின் நகர்வுகளை பொறுத்தே அடுத்தகட்ட தாக்குதல்கள் இருக்கும் என்றும், உலகம் முழுவதும் உள்ள வல்லுனர்கள் கூறி உள்ளனர்.

அமெரிக்க அதிபர் 3 ஆம் உலகப் போர் குறித்து கூறிய கருத்தும், தற்போது நார்வேயில் நேட்டோ படைகள் குவிக்கப்பட்டு வருவதால், சர்வதேச அளவில் உக்ரைன் விவகாரம் மேலும் பல சிக்கலை ஏற்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.