பிக்பாஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அறிவிக்கப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம்.

இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் சீசன்களில் பிக் பாஸ் சீசன் 1-லிருந்து  சினேகன், சுஜா வருணி, ஜூலி, பிக் பாஸ் சீசன் 2-லிருந்து தாடி பாலாஜி, ஷாரிக், பிக் பாஸ் சீசன் 3-லிருந்து வனிதா விஜயகுமார், அபிராமி வெங்கடாச்சலம், பிக் பாஸ் சீசன் 4-லிருந்து அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தி & பிக் பாஸ் சீசன் 5-லிருந்து நிரூப்  நந்தகுமார், அபிநய், தாமரைச்செல்வி, சுருதி  ஆகியோர் ஹவுஸ் மேட்ஸ்களாக நுழைந்துள்ளனர்.

முன்னதாக முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆகி வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க விஜய் டிவி பிரபலமும் நடிகருமான KPY சதீஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தனது விக்ரம் பட படப்பிடிப்பு காரணமாக விடைபெற்றார். 

இதனையடுத்து முன்னணி கதாநாயகன் சிலம்பரசன் TR பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த வார பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலிருந்து பிரபல பாடலாசிரியரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளரான கவிஞர் சினேகன் வெளியேறுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று (மார்ச் 13ஆம் தேதி) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கவிஞர் சினேகன் வெளிவருவது ஒளிபரப்பாகவுள்ளது.