“எதிர்காலத்தில் சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படக்கூடும்” என்று, ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளது, தமிழக மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை உட்பட பிற நகர்ப்புறங்களில் எதிர்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படக்கூடும் என ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகமே, கொரோனா என்னும் கொடிய வைரசால், வழி பிதிங்கி நிர்க்கதியாய் நிற்ற நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொருளாதாரம் சீரழிந்து, ஏழை எளிய மக்களை வறுமை என்னும் கொடிய நோய் வாட்டி வதைத்து வந்த நிலையில், இப்போது தான் 3 அலைகளை கடந்து, தமிழ்நாடு உட்பட இந்தியா இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது.

அத்துடன், உலகின் புதிய கால நிலை தோன்றி வருவதாகவும் சமீபத்தில் ஆய்வுகள் சமீபத்தில் வெளியான நிலையில், காலநிலை மாற்றத்தால், தமிழ்நாட்டில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று, ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது.

மேலும், “உலகம் முழுவதும் வெள்ளம், புயல்கள் மற்றும் வறட்சி போன்ற தீவிரமான வானிலை உருவாக்கும்” என்றும், நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர். 

அத்துடன், புதிதாக நிகழும் கால நிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம் மதுரை மாவட்டம் பற்றிய தகலை, இந்திய வானிலை துறை தனது ஆய்வறிக்கையின் மூலமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகவல் வெளியிட்டு இருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “காலநிலை மாற்றத்தால் மதுரை பாதிக்கப்படுவது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதி இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது “தமிழ்நாட்டில் சென்னை உட்பட பிற நகர்ப்புறங்களில் எதிர் காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படக்கூடும்” என்று, ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

அதாவது, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியா - ஜப்பான் ஆய்வகம், ரிகா இன்ஸ்ட்டியூட் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமானது முன்னதாக கையெழுத்தானது. 

அப்போது, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் மதிவாணன், ஜப்பான் கியோ பல்கலைக்கழகத்தின் இந்தியா - ஜப்பான் ஆய்வகத்தின் இயக்குனர் ரஜிப் ஷா, சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டுக்கான தூதர் டகா மசயுகி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, தொற்று நோய் குறித்தும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஆராய்ச்சி செய்ய உள்ளதாக கூறப்பட்டது.

இவற்றுடன், “பருவநிலை மாற்றம், நிலத்தில் ஊடுருவும் கடல் நீர், பருவமழை பொய்த்தது உள்ளிட்ட பல காரணங்களால் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் எதிர் காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படக்கூடும் எனவும், அதனை தவிர்க்க இந்தியா - ஜப்பான் கூட்டு முயற்சியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும்” அப்போது தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.