“உக்ரைன் நாட்டின் மெலிடோபோல் நகர மேயர் இவான் ஃபெடோரோவை ரஷ்யப் படைகள் கடத்திச் சென்றுவிட்டதாக” உக்ரைன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் இன்றுடன் 17 வது நாளாக நடைபெற்று வருகிறது.

உக்ரைன் நாட்டில், ரஷ்ய படைகளின் தாக்குதல்களை தாங்கிக்கொள்ள முடியாமல் அந்நாட்டில் இருந்து கிட்டதட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

இந்த சூழலில் தான், கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பதில் தாக்குதலை உக்ரைன் ரானுவம் நேற்று முதல் இன்னும் தீவிரப்படுத்தி இருக்குமு் நிலையில், உக்ரைனில் ரஷ்ய படைகள் பல இடங்களையும் தொடர்ச்சியாக கை பற்றி வருகின்றன.

அத்துடன், உக்லைன் தலைநகரான கீவினை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யாவின் தரைப்படையினர் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும்,  நேற்றைய தினம் தகவல்கள் வெளியானது. இதனால், பல இடங்களில் அங்கு வான்வழி தாக்குதல் நடத்த ரஷ்ய படைகள் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, உக்ரைன் தலைநகரான கீவ்வை ரஷ்ய படைகள் நெருங்கி உள்ளதாகவும், நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் தான், “உக்ரைன் நாட்டின் மெலிடோபோல் நகர மேயர் இவான் ஃபெடோரோவை ரஷ்யப் படைகள் கடத்திச் சென்றுவிட்டதாக” உக்ரைன் நாடாளுமன்றம் தற்போது புதிய குற்றம்சாட்டை சுமத்தி உள்ளது.

இது குறித்து உக்ரைன் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், “எதிரியுடன் ஒத்துழைக்க மறுத்த காரணத்தால் 10 ஆக்கிரமிப்பாளர்களை கொண்ட குழு மெலிடோபோல் மேயர் இவான் ஃபெடோரோவை கடத்திச் சென்றதாக” கூறிப்பட்டு உள்ளது. 

அத்துடன், “முற்றுகையிடப்பட்ட நகரின் அவசரகால மையத்தில் உள்ள பிரச்னைகளைக் கையாளும் போது, மேயர் கடத்தி செல்லப்பட்டார்” என்றும், கூறப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, “கடத்தப்பட்ட மேயர் உக்ரைனையும், அவரது நகர மக்களையும் துணிச்சலுடன் பாதுகாத்தவர் என்றும், ரஷ்யாவின் இந்த செயல் வெளிப்படையாக அவர்களின் பலவீனத்தின் அறிகுறியாகும் என்றும், அவர்கள் ஒரு புதிய கட்ட பயங்கரவாதத்திற்கு நகர்ந்து உள்ளனர்” என்றும், குறிப்பிட்டு உள்ளார். 

“அதில் அவர்கள் முறையான உள்ளூர் உக்ரைன் அதிகாரிகளின் பிரதிநிதிகளை அகற்ற முயற்சிக்கின்றனர்” என்றும், அவர் கூறியுள்ளார்.

அதே போல், “மெலிடோபோல் மேயர் கடத்தப்பட்டது ஒரு குறிப்பிட்ட நபருக்கு எதிரானது என்றும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது என்றும், உக்ரைனுக்கு எதிரானதான குற்றம் மட்டுமல்ல, இது ஜனநாயகத்திற்கு எதிரான குற்றம்” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார். 

குறிப்பாக, “ரஷ்ய படைகளின் செயல்கள், ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயல்களைப் போல கருதப்படும்” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

முன்னதாக, உக்ரைன் நாட்டில் உள்ள மெலிடோபோலுக்கு வடக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சபோரிஜியாவின் பிராந்திய கவுன்சிலின் துணைத் தலைவர் கடத்தப்பட்டு அதன் பிறகு சில நாட்கள் கடந்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.