தமிழ்  தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் அஞ்சனா.சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.இதனை தொடர்ந்து புதுயுகம் மற்றும் ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்தார்.

டிவிகளில் மட்டுமல்லாமல் பல இசை வெளியீட்டு விழா மற்றும் பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.தனது பேச்சுதிறமையால் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் அஞ்சனா.ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் தொடரை தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா.இதனை தொடர்ந்து தீபக்குடன் இணைந்து இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா.

கொரோனவை அடுத்து சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா என்றாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் குறையாமலேயே இருந்தது.சமூகவலைத்தளங்களில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் அஞ்சனா புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

இவர் சமீபத்தில் பகிர்ந்த போட்டோஷூட் ஒன்று செம வைரலானது அதில் சில நெட்டிசன்கள் பட,சீரியல் வாய்ப்புகளுக்காக கிளாமர் காட்டுகிறார்,சீக்கிரம் இவருக்கு டைவர்ஸ் ஆகிவிடும் என்று கமென்ட் செய்ய அதனை பார்த்து செம கோவமான அஞ்சனா,நான் ஒருபோதும் நடிப்பதற்காக இப்படி செய்வதில்லை புகைப்படம் எடுப்பது எனக்கு பிடித்த ஒன்று அதனால் அதனை செய்கிறேன் நடிக்க வேண்டும் என்றால் எப்போதோ நடித்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும் பெண்களை அவர்களுக்கு பிடித்ததை நிம்மதியாக செய்யவிடுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

vj anjana rangan strong reply to netizen comment about her recent photoshoot

vj anjana rangan strong reply to netizen comment about her recent photoshoot