தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாகவும் முன்னணி நட்சத்திர நடிகராக விளங்கும் நடிகர் சிலம்பரசன் 3-வது முறையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்து தல திரைப்படமும் தயாராகி வரும் நிலையில், முன்னதாக V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துள்ள, மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

மாநாடு படத்தில் சிலம்பரானுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் மிரட்டலான வில்லனாக S.J.சூர்யா நடித்துள்ளார். ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவில் பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்துள்ள மாநாடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பல தடைகளைத் தாண்டி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ப்ளாக பஸ்டர் ஹிட்டானது.இந்நிலையில் மாநாடு திரைப்படத்தில் இடம்பெற்ற மெஹரேஸையலா பாடல் வீடியோ தற்போது வெளியானது அசத்தலான மெஹரேஸையலா பாடல் வீடியோ இதோ….