இசையமைப்பாளர்-நடிகர் என அசத்தி வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னிச்சிறகுகள், காக்கி ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.

முன்னதாக இயக்குனர் & ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் தமிழ் படம் பட இயக்குனர் அமுதன் இயக்கத்தில் ரத்தம் ஆகிய திரைப்படங்களும் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.இந்த வரிசையில் அடுத்ததாக விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் கொலை. 

இயக்குனர் பாலாஜி.K.குமார் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமாக தயாராகியுள்ள கொலை படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள கொலை படத்திற்கு செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார்.

விஜய் ஆண்டனி உடன் இணைந்து ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்க ராதிகா சரத்குமார், மீனாக்ஷி சௌத்ரி, முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் கொலை திரைப்படத்தின்  கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் போஸ்டர்கள் வரிசையாக வெளியாகவுள்ளன.  அந்த வகையில் முதலாவதாக மீனாக்ஷி சௌத்ரியின் லைலா கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதிய போஸ்டர் தற்போது வெளியானது. சுவாரஸ்யமான போஸ்டர் இதோ…
 

No one lives forever, but one can live a life that’s worth dying for. #whokilledleila #kolai@vijayantony @DirBalajiKumar @FvInfiniti & @lotuspictures1 @ritika_offl @Meenakshiioffl @murlisharma72 @realradikaa @sivakvijayan @ggirishh @EditorSelva @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/b9h9BVRrCZ

— Infiniti Film Ventures (@FvInfiniti) July 7, 2022