தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அருண்விஜய் அடுத்ததாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸில் நடித்துள்ளார். ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் விரைவில் சோனி லைவ் தளத்தில் ரிலீசாகவுள்ளது.

முன்னதாக மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமான அக்னிச்சிறகுகள் திரைப்படம் விரைவில் ரிலீஸாக தயாராகி வரும் நிலையில், தொடர்ந்து பார்டர், சினம், பாக்சர் என வரிசையாக அதிரடி ஆக்ஷன் ப்ளாக் திரைப்படங்கள் அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. 

இதனிடையே தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் கடந்த ஜூலை 1-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. யானை திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு, அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அதிரடியான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் யானை திரைபடத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள யானை படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து படக்குழுவினர் யானை படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 
அந்த புகைப்படங்கள் இதோ…
 

Marking the grand success, the entire team of #Yaanai celebrated the occasion by cutting a cake together#YaanaiRunningSuccessfully@arunvijayno1 #DirectorHARI @DrumsticksProd @priya_Bshankar @gvprakash @KKRCinemas @ertviji @thondankani @realradikaa @iYogibabu @Ammu_Abhirami pic.twitter.com/11lTOr27Po

— CtcMediaboy (@CtcMediaboy) July 7, 2022