இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

முன்னதாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடித்து வந்த இந்தியன் 2 திரைப்படம் விபத்து மற்றும் சில காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இந்தியன் 2  திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதில் பலவிதமான சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் கமல்ஹாசனின் வேண்டுகோளுக்கிணங்க உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு சிக்கல்களை சுமுகமாகத் தீர்த்து வைத்தார்

இதனையடுத்து இந்தியன் 2 திரைப்படத்தில் தயாரிப்பாளராகவும் இணைந்துள்ள உதயநிதி ஸ்டாலின் விரைவில் இநதியன் 2 திரைப்படம் தொடங்கும் எனவும் அறிவித்திருந்தார். இதனிடையே தற்போது கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை ரசித்து பார்த்து படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்த புகைப்படங்களையும் வெளியிட்டு, "நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்து குழுவினரை இன்று அழைத்து பாராட்டிய கமல் ஹாசன் சாருக்கு நன்றி. #விக்ரம்-ல் உடன் பங்கேற்றதற்காக நினைவுப் பரிசு வழங்கினார். நாங்கள் பெரியார்-அம்பேத்கர் சிலைகளை பரிசளித்து மகிழ்ந்தோம்" என தெரிவித்துள்ளார்.  கமல்ஹாசன் நெஞ்சுக்கு நீதி படக்குழுவினரை அழைத்து பாராட்டிய புகைப்படங்கள் இதோ…

 

'#NenjukuNeedhi' படத்தை பார்த்து குழுவினரை இன்று அழைத்து பாராட்டிய @ikamalhaasan சாருக்கு நன்றி. '#Vikram'-ல் உடன் பங்கேற்றதற்காக நினைவுப் பரிசு வழங்கினார். நாங்கள் பெரியார்-அம்பேத்கர் சிலைகளை பரிசளித்து மகிழ்ந்தோம். @BoneyKapoor @Arunrajakamaraj @RedGiantMovies_ @mynameisraahul pic.twitter.com/q5DAFnW1yg

— Udhay (@Udhaystalin) July 7, 2022