தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக சிறந்த நடிகராகவும் விளங்கும் சீயான் விக்ரம் அடுத்ததாக ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 1 உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள நிலையில், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் டீசர் இன்று ஜூலை 8-ம் தேதி வெளியாகிறது.

இந்த வரிசையில் டிமான்டி காலனி & இடைக்கால நொடிகள் படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அட்டகாசமான  பல கெட்டப்களில் சீயான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கோப்ரா திரைப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மிருனாளினி ரவி, ரோஷன் மேத்யூ, மியா ஜார்ஜ்,இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கோப்ரா படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் கோப்ரா திரைப்படத்திலிருந்து லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகின. சமீபத்தில் கோப்ரா படத்தின் 3-வது பாடலாக வெளியாகி ரசிகர்களின் மனதை மயக்கியுள்ள உயிர் உருகுதே பாடல் காட்சியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ட்ரெண்டாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

#Cobra stills form #UyirUrugudhey lyric video ♥️

➡️https://t.co/JFAhiaCa1Q#ChiyaanVikram

An @AjayGnanamuthu Film 🎬
An @arrahman Musical 🥁@RedGiantMovies_ @Udhaystalin @SrinidhiShetty7 @SonyMusicSouth @proyuvraaj#CobraFromAugust11 pic.twitter.com/hpEGfZAiA2

— Seven Screen Studio (@7screenstudio) July 8, 2022