இந்திய திரையுலகின் ஈடு இணையற்ற நடன இயக்குனராக, சக்ஸஸஸ்ஃபுல் கமர்ஷியல் இயக்குனர், முன்னணி நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் பிரபுதேவா இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் மாற்று திறனாளியாக மிரட்டலான கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்த பொய்க்கால் குதிரை திரைப்படம் விரைவில் வெளிவர தயாராகி வருகிறது.

முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் பஹீரா நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் ரேக்ளா மற்றும் முஸாசிர் என அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களாக தயாராகும் புதிய படங்களில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் பிரபுதேவா & ரெஜினா கெஸன்ட்ரா இணைந்து நடிக்கும் திரைப்படம் ஃபிளாஷ்பேக். அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ஃபிளாஷ்பேக் திரைப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் நிலையில், மீண்டும் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் மை டியர் பூதம் திரைப்படத்தில் பிரபுதேவா நடித்துள்ளார்.

குழந்தைகள் கொண்டாடும் ஃபேண்டசி காமெடி திரைப்படமாக மை டியர் பூதம் திரைப்படம் வருகிற ஜூலை 15-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் N.ராகவன் இயக்கத்தில் பிரபு தேவா, ரம்யா நம்பீசன் மற்றும் மாஸ்டர் அஸ்வந்த் இணைந்து நடித்துள்ள மை டியர் பூதம் படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மை டியர் பூதம் திரைப்படத்தின் அப்பக்க டர்ரரு பாடல் தற்போது வெளியானது. கலக்கலான அந்த பாடல் இதோ…