தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஷ்ணு விஷால் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். குறிப்பாக இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அந்தவகையில் ராட்சசன் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் மற்றொரு சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மோகன்தாஸ். இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் மோகன்தாஸ் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகியுள்ள FIR திரைப்படம் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.FIR திரைப்படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் கௌரவ் நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

FIR திரைப்படத்தை விஷ்ணு விஷாலின் VV ஸ்டூடியோஸ் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில் தோனி கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ள FIR திரைப்படத்திற்கு அஸ்வத்  இசை அமைத்துள்ளார்.  இந்நிலையில் தற்போது FIR படத்திலிருந்து புதிய தீம் பாடல் வெளியானது.

இசையமைப்பாளர் அஷ்வத் இசையில் உருவாகியிருக்கும் இந்த தீம் பாடலை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்.T.R பாடியுள்ளார். நடிகர் சிலம்பரசன்.T.R பாடும் அதிரடியான FIR தீம் பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.