தமிழ் திரை உலகின் பிரபல இளம் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஜெயம் ரவியின் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன், விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் மற்றும் பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் கதாநாயகியாகவும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் மெண்டல் மதிளோ, சித்ரலஹரி, பிரோச்சேவரேவருற, அல்லு அர்ஜுனின் அள வைகுண்டபுரம்லோ மற்றும் அருண் விஜய்யின் தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக வழிவந்த ரெட் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கில் ராணா டகுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவரவுள்ள விரட்ட பர்வம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கில் இயக்குனர் சண்டு மொண்டெடி இயக்கத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் பிளட் மேரி.

நேரடியாக aha Original OTT தளத்தில் விரைவில் ரிலீசாக உள்ள பிளட் மேரி திரைப்படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நிவேதா பெத்துராஜன் பிளட் மேரி திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…