இன்றைய இளைஞர்களின் இசைநாயகன் அனிருத்,2011-ல் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.தனது கடின உழைப்பினால் இந்த உயரத்தை எட்டியுள்ள அனிருத்துக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

தர லோக்கல் குத்து பாடல்கள் என்றாலும் சரி,இதயங்களை வருடம் ரொமான்டிக் பாடல் என்றாலும் சரி இன்றைய ஜெனெரேஷனின் Pulse அறிந்து அசத்தலான இசையை வழங்குவார் அனிருத்.அனிருத்துக்கும் பிப்ரவரி 14-க்கும் ஒரு தொடர்பு உள்ளது.ஒவ்வொரு வருடமும் இவரது பாடல் ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகிவிடும்.

2015-ல் ஆக்கோ என்ற படத்தின் முதல் பாடல் எனக்கென யாரும் இல்லையே என தொடங்கியது இந்த பயணம்,2016-ல் வெளியான அவளுக்கென பாடலும் செம ஹிட் அடிக்க காதலர் தின சென்டிமென்டை கட்சிதமாக பிடித்து கொண்டார் அனிருத்.அப்போதிருந்து வருடா வருடம் தவறாமல் ரசிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் விருந்தளித்து வருகிறார்.

2017-ல் ஒண்ணுமே ஆகல,2018-ல் ஜூலி,2019-ல் மறக்கவில்லையே,2020-ல் குட்டி ஸ்டோரி என்றிருக்க 2021-ல் ரெண்டு காதல் பாடல் என வரிசையாக ஹிட் கொடுத்து ரசிகர்களையும் அந்த காதலர் தின அனிருத் ஸ்பெஷலுக்காக காத்திருக்க வைத்தார் அனிருத்.

அப்படி இந்த வருடம் என்ன பாடல் ரிலீசாக போகிறது என காத்திருந்த ரசிகர்களுக்கு பதிலாக சில மணி நேரத்துக்கு முன் வந்த பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் பதிலாக அமைந்துள்ளது.இந்த முறை வித்தியாசமான அரபிக் குத்து பாடலை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.