தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் ஷங்கர் இந்தியத் திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக பல பிரம்மாண்ட திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அந்தவகையில் அடுத்ததாகத் தெலுங்கில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் #RC15 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதனிடையே இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தற்போது கதாநாயகியாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அதிதி ஷங்கர். நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கும் விருமன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில் விருமன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நடிகை அதிதி ஷங்கர் தொடர்ந்து பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார். தெலுங்கில் விரைவில் வெளிவர இருக்கும் கானி படத்தில் அதிதி ஷங்கர் ஒரு பாடலை பாடியுள்ளார். இயக்குனர் கிரண் கொரப்படி இயக்கத்தில் நடிகர் வருண் தேஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் கானி படத்திற்கு இசையமைப்பாளர் தமன்.S இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் நாளை (பிப்ரவரி 8ஆம் தேதி) கானி படத்திலிருந்து ரோமியோ ஜூலியட் எனும் பாடல் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த பாடலை நடிகை அதிதி ஷங்கர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் தமன்.S இசையில் நடிகை அதிதி ஷங்கர் பாடியுள்ள ரோமியோ ஜூலியட் பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. கலக்கலான ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.