தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக திகழும்  நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஓ மணப்பெண்ணே & கசடதபற ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனையடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாண் GV பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்த அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்

தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகிகளில் ஒருவரான நடிகை அதுல்யா ரவி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் அடுத்ததாக மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா & அருண் அருணாச்சலம் இணைந்து தயாரிக்கும் நூறு கோடி வானவில் படத்தில் ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இயக்குனர் சசி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க, அழகிய காதல் திரைப்படமாக நூறு கோடி வானவில் தயாராகி வரும் நூறு கோடி வானவில் திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் TR நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை சித்தி இத்நானி கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் நூறு கோடி வானவில் திரைப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் மற்றும் VJ பார்வதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நூறு கோடி வானவில் திரைப்படத்திற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் நூறு கோடி வானவில் படத்தின் முதல் பாடலாக கண்ணாட்டி பாடல் தற்போது வெளியானது. அந்த பாடல் இதோ…