இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக மோகன்தாஸ் திரைப்படம் தயாராகி வருகிறது.

முன்னதாக இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த ராட்சசன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான நிலையில் அடுத்த சைக்கோ திரில்லர் படமாக தயாராகிவரும் மோகன்தாஸ் திரைப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு விஷ்ணு விஷால் நடிப்பில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸான FIR திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள FIR திரைப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார்.

விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள FIR திரைப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோருடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், பிரசன்னா.G.K படத்தொகுப்பு செய்துள்ள திரைப்படத்திற்கு அஷ்வத் இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் FIR திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் FIR திரைப்படத்திலிருந்து 3-வது DELETED காட்சி தற்போது ரிலீஸானது. இந்த DELETED காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.