இந்திய திரை உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சீயான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்திய திரை உலகின் பிரம்மாண்ட படைப்பாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு கோடை வெளியீடாக வெளிவரவுள்ள நிலையில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ள கோப்ரா திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் முதல் முறை சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான் திரைப்படம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவான மகான் படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

40 வயது முதல் 60 வயது வரையிலான டிரான்ஸ்பர்மேஷனில் சீயான் விக்ரமின் நடிப்பு மீண்டும் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கும் விதமாக இருந்தது. துருவ் விக்ரமின் நடிப்பும் பலரது கவனத்தை ஈர்க்க, பாபிசிம்ஹா, சிம்ரன், சனந்த் & முத்துக்குமார் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் மிகக் கச்சிதமாக நடித்திருந்தனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் & மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியான மகான் திரைப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜின் மகான் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. அசத்தலான அந்த மேக்கிங் வீடியோ இதோ...