உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி இன்றுவரை தொடர்ந்து திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக வெற்றிநடை போட்டு வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் விக்ரம் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததோடு தமிழகத்தில் ALL TIME RECORD சாதனை படைத்துள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவான விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. உலக நாயகனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஃபேன்பாய் சம்பவமாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கமல்ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள விக்ரம் படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் விக்ரம் திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதியின் புதிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் சந்தனம் கதாபாத்திரத்தின் மொத்த குடும்பமும் இணைந்து இருக்கும் குடும்ப புகைப்படத்தை விக்ரம் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ட்ரெண்டாகும் அந்த புகைப்படம் இதோ…
 

#Sandhanam's strength & weakness is framed.#Ulaganayagan #KamalHaasan #VikramAllTimeRecord @ikamalhaasan @Dir_Lokesh @Udhaystalin @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @turmericmediaTM @RedGiantMovies_ pic.twitter.com/J5akVRWXPL

— Raaj Kamal Films International (@RKFI) June 21, 2022