சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன் இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார்.இந்த படத்தில் காயத்ரி,அனிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இது விஜய்சேதுபதி , சீனு ராமசாமி இருவரும் இணையும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னதாக  தென்மேற்கு பருவக்காற்று,இடம் பொருள் ஏவல் ,தர்மதுரை உள்ளிட்ட படங்களில் பண்ணியாற்றியுள்ளனர்.மாமனிதன் படத்திற்கு இளையராஜா ,யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது.இந்த படத்தின் டீஸர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படத்தின் தமிழக மற்றும் கேரளா உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் கைப்பற்றியிருந்தார்.

பல முறை தள்ளிப்போன இந்த படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ஸ்னீக் பீக் காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்