தமிழ் திரை உலகின் மிக முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் விஜயகாந்த் அவர்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவராகவும் திகழ்கிறார். சினிமாவில் நட்சத்திர நாயகராக ஜொலித்த விஜயகாந்த் அவர்கள் அரசியலிலும் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்.

கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் அவர்கள் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜயகாந்த் அவர்களின் ரத்த ஓட்டம் சீராக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது வலது காலில் 3 விரல்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில்,
நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
 
என தெரிவிக்கப்பட்டுள்ளது.திரு.விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப கலட்டா குடும்பம் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.

 

pic.twitter.com/2eyxnBnsmi

— Vijayakant (@iVijayakant) June 21, 2022