இந்திய சினிமாவின் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் சந்தனம் எனும் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் எனும் ஹிந்தி படத்திலும் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகியுள்ள மும்பைகர் படத்திலும்  அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காந்தி டாக்ஸ் எனும் மௌன படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் வருகிற ஜூன் 24-ம் தேதி நாளை ரிலீஸாகவுள்ள நிலையில், ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஷாஹீத் கபூர் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ஃபர்ஸி வெப்சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த வரிசையில் மலையாளத்தில் அறிமுக இயக்குனர் இந்து.VS இயக்கத்தில் 19(1)(a) திரைப்படத்தில் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து நித்யாமேனன் இந்திரஜித் சுகுமாரன், இந்தரன்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவாகியிருக்கும் 19(1)(a) திரைப்படத்திற்கு மகேஷ் மாதவன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்நிலையில் 19(1)(a) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள 19(1)(a) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Here is the first look poster of 19(1)(a) malayalam.

Directed by debutant #IndhuVS , produced by @IamAntoJoseph and music by #GovindVasantha@AJFilmCompany @AanMegaMedia pic.twitter.com/DHItbmaF9f

— VijaySethupathi (@VijaySethuOffl) June 22, 2022