தென்னிந்திய திரையுலகின் குறிப்பிடப்படும் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் கதாநாயகன், வில்லன், முக்கிய வேடங்கள் என அனைத்து கதாபாத்திரங்களிலும் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

முன்னதாக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து தீயவர் குலைகள் நடுங்க திரைப்படத்தில் நடித்துள்ள அர்ஜுன் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து திரைப்படங்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் கடைசியாக தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடித்த சொல்லி விடவா திரைப்படத்தை அர்ஜுன் இயக்கியிருந்தார்.

இதனையடுத்து தற்போது மீண்டும் ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்கத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல தெலுங்கு இயக்குனரும் நடிகருமான விஸ்வாக் சென் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே ஜி எஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படபடத்திற்கு இசையமைக்கிறார்.

அர்ஜுனின் ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தெலுங்கில் தயாராகும் இப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னணி தெலுங்கு நட்சத்திர நடிகரான பவன் கல்யாண் தொடங்கி வைக்க இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஜூன் 23-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

.@srfioffl's Prod No.15 has been launched today with a formal Pooja Ceremony🪔

🎬POWER⭐ @PawanKalyan
1st shot @Ragavendraraoba
📽️@prakashraaj
📃@iVishnuManchu

🌟ing @VishwakSenActor @aishwaryaarjun

Produced, Written & Directed by @akarjunofficial@IamJagguBhai @RaviBasrur pic.twitter.com/hgCxat9FPv

— 𝐕𝐚𝐦𝐬𝐢𝐒𝐡𝐞𝐤𝐚𝐫 (@UrsVamsiShekar) June 23, 2022