“மருமகனே கறி சோறு சாப்பிட வா..” விருந்துக்கு அழைத்து மருமகனை வெட்டி கொன்ற மாமனார்!

“மருமகனே கறி சோறு சாப்பிட வா..” விருந்துக்கு அழைத்து மருமகனை வெட்டி கொன்ற மாமனார்! - Daily news

கறி விருந்துக்கு அழைத்து, மருமகனை மாமனாரே வெட்டி படுகொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதுவும் திருவாரூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்து உள்ள வீரபுரம் பகுதியைச் சேர்ந்த சிற்றரசு என்பவரின் மகன் 27 வயதான முத்தரசன் என்ற இளைஞன், அங்குள்ள திருத்துறைப்பூண்டி மங்கல நாயகி புரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகள் 27 வயதான அரவிந்தியாவை, கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இருவரும் அந்த பகுதியின் பல்வேறு இடங்களுக்கு காதலர்களாக வலம் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், காதலர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த 13 ஆம் தேதி அன்று முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். 

இவர்களது திருமணம் முடிந்து வெறும் 5 நாட்கள் ஆன நிலையில், திருமணம் நடந்த அடுத்த 2 நாட்களிலேயே “மகள் மற்றும் மருமகனை, விருந்துக்கு வறுமாறு, மாமனார் ரவிச்சந்திரன் தனது வீட்டிற்கு அழைத்து உள்ளார்.

அதன்படி, கடந்த ஜூன் 15 ஆம் தேதி மாமனார் வீட்டில் நடைபெற்ற விருந்திற்கு, புதுமன தம்பதிகள் இருவரும் வந்திருக்கிறார்கள். 

விருந்தில் பங்கேற்று சாப்பிட்ட மாப்பிள்ளை முத்தரசன் தனது மனைவியுடன் அடுத்த நாளே அங்கேயே தங்கி உள்ளார்.

அப்போது மாப்பிள்ளை முத்தரசன், மது போதையில் தனது மனைவி அரவிந்தியாவுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்ததாக தெரிகிறது.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தந்தை புதுமன தம்பதிகள் இருவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆனால்,  குடி போதையில் இருந்த மருமகன் முத்தரசன், மாமனாரின் பேச்சை கேட்காத நிலையில், அவர் போதையில் சற்றே அடம் பிடித்து உள்ளார்.

இதனால், மாமனாருக்கும் - மருமகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், கடும் கோபம் அடைந்த அந்த மாமனார், அந்த மருமகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், கடும் கோபம் அடைந்த அந்த மாமனார், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மருமகளை சரமாரியாக வெட்டி உள்ளார். 

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மருமகன் முத்தரசன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்து உள்ளார். 

இது குறித்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி, இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன், மருமகனை வெட்டி கொலை செய்த மாமனார் ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment