தொடர்ந்து சோசியல் மீடியாவை கன்ட்ரோலில் வைத்திருக்கும் தளபதி 67... ட்ரெண்டாகும் படப்பூஜையின் புது புகைப்படங்கள் இதோ!

விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படப்பூஜை புகைப்படங்கள்,vijay lokesh kanagaraj in thalapathy 67 pooja stills out now | Galatta

இந்திய சினிமாவின் சென்சேஷனல் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் தளபதி 67 திரைப்படம் பல கோடி ரசிகர்களிடையே எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றியும் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ்- தளபதி விஜய் இணைவதும் தான்.

இந்த முறை 100 சதவீதம் எனது படமாக இருக்கும் என ஒவ்வொரு முறையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தது இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்ட, கடந்த ஜனவரி 2ம் தேதி தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்பே வெளியான தகவல்களின்படி தளபதி விஜயுடன் இணைந்து த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் மிக முக்கிய வேடங்களில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய அனிருத் இசையமைக்கும் தளபதி 67 திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்கத்தில், அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். சற்று முன்பு தளபதி 67 படப்பூஜை வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.

முன்பே அறிவித்தபடி பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் வரிசையாக தளபதி 67 படத்தின் அடுத்த அடுத்த அட்டகாசமான அறிவிப்புகள் இருக்கும் என தெரிவித்த நிலையில், பிப்ரவரி மூன்றாம் தேதியில் தளபதி 67 படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தளபதி 67 படத்தின் படப்பூஜை புகைப்படங்களை தற்போது படக்குழுவினர் வெளியிட்டனர். அட்டகாசமான அந்த புகைப்படங்கள் இதோ…
 

Enna apdiye kelambirvom nenacheengala? 😉
Thirupi poravanga ila nanba, thirupi kudukuravanga 🔥#Thalapathy67Poojai exclusive stills are here 🔥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss @duttsanjay pic.twitter.com/LrL3YZshhJ

— Seven Screen Studio (@7screenstudio) February 1, 2023

குக் வித் கோமாளி சீசன் 4 பிரபல நடிகரின் Surprise entry.. – ட்ரெண்டாகும் கலகலப்பான வீடியோ இதோ..
சினிமா

குக் வித் கோமாளி சீசன் 4 பிரபல நடிகரின் Surprise entry.. – ட்ரெண்டாகும் கலகலப்பான வீடியோ இதோ..

அதிக லைக்குகள் பெற்ற கோலிவுட் நடிகர்களில் சிவகார்த்திகேயன் முதலிடம் - மீண்டும் ட்ரெண்ட் செய்யப்படும் புகைப்படம் இதோ..
சினிமா

அதிக லைக்குகள் பெற்ற கோலிவுட் நடிகர்களில் சிவகார்த்திகேயன் முதலிடம் - மீண்டும் ட்ரெண்ட் செய்யப்படும் புகைப்படம் இதோ..

உலககோப்பை விளையாடிய கிரிக்கெட் வீரரை மணக்கும் நடிகர் தலைவாசல் விஜயின் மகள் – ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து..
சினிமா

உலககோப்பை விளையாடிய கிரிக்கெட் வீரரை மணக்கும் நடிகர் தலைவாசல் விஜயின் மகள் – ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து..