பிக்பாஸ் முடித்த கையோடு மீண்டும் விஜய் டிவியில் ஷிவினுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு... அட்டகாசமான வீடியோ இதோ!

பாரதி கண்ணம்மா சீரியல் என்ட்ரி கொடுக்கும் ஷிவின்,biggboss shivin ganaesan cameo in bharathi kannama serial climax episode | Galatta

தமிழக மக்களின் அபிமானமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் அசீம் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவின் கணேசனும் பெற்றனர்.

அனேக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேவரட்டான போட்டியாளர்களான விக்ரமனும் ஷிவினும் வெற்றி பெறாதது பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. குறிப்பாக முதல் திருநங்கை போட்டியாளராக ஷிவின் கட்டாயம் பட்டத்தை வெல்ல வேண்டும் என பல கோடி தமிழ் ரசிகர்களும் விரும்பினர். இருப்பினும் ஷிவின் மூன்றாம் இடத்தையே பிடித்தார்.

இதனிடையே பிக் பாஸ் முடிந்த கையோடு தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஷிவினுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த முறை போட்டியாளராக அல்ல நடிகையாக. ஆம் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் மெகா தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியமான கௌரவ தோற்றத்தில் ஷிவின் நடித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து மக்களின் மனம் கவர்ந்த மெகா சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. அதன் கிளைமாக்ஸ் எபிசோடில் பாரதி - கண்ணம்மா இருவரின் திருமண வைபவம் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் நடிகர் RJ.பாலாஜி தனது ரன் பேபி ரன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த எபிசோடில் RJ.பாலாஜி கலந்து கொண்ட அந்த ப்ரோமோ வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக பாரதி கண்ணம்மா சீரியலின் கிளைமாக்ஸில் ஷிவின் கௌரவ வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் கிடைத்தன. தொடர்ந்து ஷிவினும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் இவை அனைத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் தற்போது RJ.பாலாஜி வெளியிட்டுள்ள அந்த ப்ரோமோ வீடியோவில் ஷிவினும் இடம்பெற்று இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த புரோமோ வீடியோ இதோ…
 

And finally, நான்கு வருடங்களாக தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட
பாரதி - கண்ணம்மாவின் திருமண வைபவத்தில் கலந்துக்கொண்டேன்.!!!😀#RunBabyRun 🖤 meets #BarathiKannamma ❤️@vijaytelevision 😎@disneyplusHSTam 🤓 pic.twitter.com/nDOyMBauk3

— RJ Balaji (@RJ_Balaji) February 1, 2023

விரைவில் தாயாகிறார் நடிகை பூர்ணா... சோசியல் மீடியாவில் வைரலாகும் வளைகாப்பு புகைப்படங்கள்!
சினிமா

விரைவில் தாயாகிறார் நடிகை பூர்ணா... சோசியல் மீடியாவில் வைரலாகும் வளைகாப்பு புகைப்படங்கள்!

வேகமெடுக்கும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்... மாஸாக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய உலக நாயகன் கமல்ஹாசன்!
சினிமா

வேகமெடுக்கும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்... மாஸாக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய உலக நாயகன் கமல்ஹாசன்!

தளபதி 67 பட அதிரடி அறிவிப்புகளின் முதல் இன்னிங்ஸ்... அட்டகாசமான நடிகர்களின் பட்டியல்!
சினிமா

தளபதி 67 பட அதிரடி அறிவிப்புகளின் முதல் இன்னிங்ஸ்... அட்டகாசமான நடிகர்களின் பட்டியல்!