ஸ்டைலா.. கெத்தா.. தளபதி விஜயின் Entry.. - ‘தளபதி 67’ பட பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு - ரசிகர்கள் கொண்டாடி வரும் வீடியோ இதோ..

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ வெளியானது -  Thalapathy vijay Thalapathy 67 movie Pooja Video out | Galatta

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் திரைப்படம் தளபதி விஜயின் ‘தளபதி 67’.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளது. மேலும் படத்திற்கு அனிரூத் இசையமைக்க ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். மற்றும்  ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு பல மாதங்களாக ரசிகர்கள் கேட்டநிலையில் இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரும் பிப்வரி 1,2,3 ஆகிய தேதிகளில் அப்டேட் வெளியிடப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

அதன் படி அப்டேட்டுகள் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டதற்கு முன்பே வெளியிட தொடங்கியது படக்குழு. நேற்று ஜனவரி 31 அன்று தளபதி 67 ல் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த அப்டேட்டை வெளியிட்டது படக்குழு. அதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், நடிகை பிரியா ஆனந்த், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் மற்றும் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும் இன்று தளபதி 67 படக்குழு மேலும் சில அப்டேட்டுகளை கொடுத்தது. அதில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்கவிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜயும் திரிஷாவும் ஐந்தாவது முறையாக நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தளபதி 67 படக்குழு படத்திற்கான பாடல் மற்றும் இசை உரிமை பெற்ற சோனி நிறுவனத்தை அறிவித்தது.

தொடர் அப்டேட்டுகளை வெளியிட்டு வரும் தளபதி  67 படக்குழு. தளபதி 67 படத்திற்கான  கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியின் பிரத்யேக வீடியோவை தற்போது வெளியிட்டது.  பட பூஜையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் மற்றும் ஜெகதீஸ் ஆகியோருடன் தளபதி விஜய், திரிஷா, அர்ஜுன், நடன இயக்குனர் சாண்டி, பிரியா ஆனந்த், மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். மேலும் இவர்களுடன் இயக்குனர் புஷ்கர், இயக்குனர் ரவிக்குமார், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் ஸ்ரீ கணேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

மெழுகுவர்த்தி ஏற்றி துவங்கிய பட பூஜை வீடியோ அனிரூத் இசையில் அட்டகாசமாக தொகுத்து வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பெருமளவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி 67 படக்குழு தற்போது காஷ்மீரில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக முகாமிட்டுள்ளது. லோகேஷ் அறிவித்தது போல தொடர்ந்து வரும் காலங்களில் தளபதி 67 படத்திற்கான அப்டேட் தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

14 ஆண்டுகளுக்கு பின் தளபதி விஜய் படத்தில் இணைந்த திரிஷா.. ரசிகர்கள் கொண்டாட்டம் - ‘தளபதி 67’ படக்குழு வெளியிட்ட Special Video..
சினிமா

14 ஆண்டுகளுக்கு பின் தளபதி விஜய் படத்தில் இணைந்த திரிஷா.. ரசிகர்கள் கொண்டாட்டம் - ‘தளபதி 67’ படக்குழு வெளியிட்ட Special Video..

அவெஞ்சர்ஸ் படக்குழுவுடன்  இணைந்த சமந்தா – உற்சாகத்தில் ரசிகர்கள்.. அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..
சினிமா

அவெஞ்சர்ஸ் படக்குழுவுடன் இணைந்த சமந்தா – உற்சாகத்தில் ரசிகர்கள்.. அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..

அட்லீ – பிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை.. குவிந்து வரும் வாழ்த்துக்கள்.. அசத்தலான வீடியோவுடனான அறிவிப்பு இதோ..
சினிமா

அட்லீ – பிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை.. குவிந்து வரும் வாழ்த்துக்கள்.. அசத்தலான வீடியோவுடனான அறிவிப்பு இதோ..