தனுஷின் வாத்தி பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய கீர்த்தி சுரேஷ்!

தனுஷின் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரிக்கு திருமணம்,Dhanush in vaathi director venky atluri got married | Galatta

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராகவும் இந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகராகவும் விளக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வாத்தி. முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் வாத்தி திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி எழுதி இயக்கியுள்ளார்.

சித்தாரா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்துள்ள வாத்தி திரைப்படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இதனிடையே வாத்தி திரைப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரியின் திருமணம் தற்போது கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இயக்குனர் வெங்கி அட்லூரியின் திருமணத்திற்கு முன்னணி தெலுங்கு நடிகர்களில் ஒருவரான நிதின் அவரது மனைவி ஷாலினி மற்றும் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி குடுமலா ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். அவர்களோடு சேர்த்து தென்னிந்திய சினிமா நட்சத்திர நாயகியாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

விரைவில் வாத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் தனக்கான தனி இடம் பிடிக்க இருக்கும் இயக்குனர் வெங்கி அட்லூரியின் திருமணத்திற்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் இவரது திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

வேகமெடுக்கும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்... மாஸாக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய உலக நாயகன் கமல்ஹாசன்!
சினிமா

வேகமெடுக்கும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்... மாஸாக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய உலக நாயகன் கமல்ஹாசன்!

தளபதி 67 பட அதிரடி அறிவிப்புகளின் முதல் இன்னிங்ஸ்... அட்டகாசமான நடிகர்களின் பட்டியல்!
சினிமா

தளபதி 67 பட அதிரடி அறிவிப்புகளின் முதல் இன்னிங்ஸ்... அட்டகாசமான நடிகர்களின் பட்டியல்!

காஜல் அகர்வால்-ரெஜினா கெஸன்ட்ரா-யோகி பாபு இணைந்து கலக்கும் புதிய ஹாரர் காமெடி படம்... அசத்தலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

காஜல் அகர்வால்-ரெஜினா கெஸன்ட்ரா-யோகி பாபு இணைந்து கலக்கும் புதிய ஹாரர் காமெடி படம்... அசத்தலான ட்ரெய்லர் இதோ!