தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகி அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக உயர்ந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அடுத்ததாக சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா கூட்டணியில் புதிய திரைப்படமாக குஷி திரைப்படம் தயாராகி வருகிறது

இதனை தொடர்ந்து இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 2வது படமாக JGM ஜனகணமன திரைப்படத்தில் நடிக்கவுள்ள விஜய் தேவரகொண்டா முதல் முறை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடித்துள்ள லைகர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.

குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மிரட்டலான முக்கிய கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடித்துள்ளார். நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து லைகர் படத்தை தயாரதந்துள்ளன.

லைகர் திரைப்படத்திற்கு விஷ்ணு சர்மா ஒளிப்பதிவில் தனிஷ்க் பக்ச்சி பாடல்களுக்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்த்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லைகர் படத்திற்கு புதிய அங்கீகாரமாக லைகர் திரைப்படத்திற்கான பிரத்யேக ட்விட்டர் எமோஜி வெளியாகியுள்ளது.
 

#Liger emoji is yours ❤️#WaatLagaDenge#LigerHuntBegins

There are a total of 4!
4th is my prediction for Aug 25th :)

— Vijay Deverakonda (@TheDeverakonda) August 18, 2022