ரசிகரகள் ஆவலோடு காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. 

சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகியோர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர். மேலும் அஸ்வின் காக்குமனு, நிழல்கள் ரவி, கிஷோர், ரியாஸ் கான், லால், நாசர், மோகன் ராமன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தோட்டாதரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக  ஏ.ஆர்.ரஹ்மான் பாடி வெளிவந்த பொன்னி நதி பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று ட்ரெண்டானது.

இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாடலாக ஆதித்த கரிகாலனின் போர் வெற்றி பாடலான சோழா சோழா எனும் பாடல் நாளைய ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சோழா சோழா பாடலின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த போஸ்டர் இதோ…
 

Swords high!
Spirits higher!!#CholaChola the next single from #PS1 releasing tomorrow at 6PM!

🎶 - @arrahman
🎤- @dsathyaprakash, #VMMahalingam, @NakulAbhyankar
✒️ - @ilangokrishnan #PonniyinSelvan#ManiRatnam #ARRahman @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/NbOa1oCRTB

— Madras Talkies (@MadrasTalkies_) August 18, 2022