தனுஷ் நடிப்பில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.யாரடி நீ மோஹினி,உத்தமபுத்திரன்,குட்டி உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

நித்யா மேனன்,ராஷி கண்ணா,ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் இந்த படத்தின் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.பிரகாஷ்ராஜ்,இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியுள்ளனர்.இந்த படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.தனுஷுடன் இவர் 3,வேலையில்லா பட்டதாரி,மாரி,தங்கமகன் படங்களை தொடர்ந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.7 வருடங்கள் கழித்து இருவரும் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.திருச்சிற்றம்பலம் ஆல்பத்திலும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இன்று இந்த படம் வெளியாகி பல ரசிகர்களும் திரையரங்கில் படத்தினை கொண்டாடி வருகின்றனர்.இவர்கள் வெற்றிக்கூட்டணி தொடர்வது குறித்த மகிழ்ச்சியை தனுஷின் நண்பன் ஷ்ரேயஸ் ஒரு தனுஷ் மற்றும் அனிருத்தின் சூப்பரான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வெளிப்படுத்தியுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.