பலகோடி தெலுங்கு திரையுலக ரசிகர்களின் இதயங்களில் குடி இருக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தமிழில் அஜித்குமார் நடித்த வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகிவரும் போலா ஷங்கர் படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் பிரபல தெலுங்கு இயக்குனர்கள் பாபி மற்றும் வெங்கி குடுமலா இயக்கத்தில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்

இதனையடுத்து புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. தொடர்ந்து நடிகை ராதிகா சரத்குமார் தயாரிப்பில் ஒரு படத்தில் சிரஞ்சீவி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் சமீபத்தில் நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார் தெரிவித்திருந்தார.  

இதனிடையே மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துவரும் திரைப்படம் காட்ஃபாதர். நயன்தாரா, சத்யதேவ் காஞ்சர்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்தில் முக்கியமான கௌரவ கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார்.

காட்ஃபாதர் படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கோனிடெல்லா புரோடக்சன் கம்பனி மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் காட்ஃபாதர் படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவில் S.தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் காட்ஃபாதர் திரைப்படத்தின் டீசர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Mega🌟 @KChiruTweets is here as #GodFather to rule FOREVER 🔥🔥#GodFatherFirstLook out now 💥💥

- https://t.co/aKQ6hp8wK0@BeingSalmanKhan #Nayanthara @MusicThaman @AlwaysRamCharan @ProducerNVP @SuperGoodFilms_ @KonidelaPro @saregamasouth pic.twitter.com/KoPEIbrGT7

— Mohan Raja (@jayam_mohanraja) July 4, 2022