அருள்நிதியின் D BLOCK பட விறுவிறுப்பான ப்ரோமோ வீடியோ!
By Anand S | Galatta | June 30, 2022 13:49 PM IST

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து தரமான த்ரில்லர் படங்களில் நடித்து வரும் நடிகர் அருள்நிதி, அடுத்ததாக ராட்சசி படத்தின் இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்திற்காக முற்றிலும் மாறுபட்ட புதிய கெட்டப்பில் அருள்நிதி நடிக்கிறார்.
முன்னதாக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள தேஜாவு திரைப்படம் வருகிற ஜூலை 26ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டைரி திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே எருமசாணி யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த விஜய் விருஸ் இயக்குனராக களமிறங்கும் D BLOCK எனும் திரில்லர் திரைப்படத்திலும் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார். அவந்திகா மிஸ்ரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் உமா ரியாஸ், தலைவாசல் விஜய், கரு.பழனியப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
MNM பிலிம்ஸ் சார்பில் அரவிந்த் சிங் தயாரித்துள்ள D BLOCK படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்குகிறது. அரவிந்த் சிங் ஒளிப்பதிவில், ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார். வருகிற ஜூலை 1ஆம் தேதி D BLOCK திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள நிலையில்,தற்போது D BLOCK திரைப்படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
New fun glimpse from Arulnithi's D Block out now - do not miss this!!
28/06/2022 05:57 PM
Arulnithi's next flick gets an official release date - check out!!
10/06/2022 06:58 PM