இந்திய திரை உலகின் ஈடு இணையற்ற இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். தலைசிறந்த எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி 2 பாகங்களாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம், அருள்மொழிவர்மன் எனும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி, நந்தினி மற்றும் ஊமை ராணி எனும் இரட்டை வேடங்களில் ஐஸ்வர்யாராய், குந்தவையாக த்ரிஷா, சுந்தரசோழராக பிரகாஷ்ராஜ், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சிறிய பழுவேட்டரையராக பார்த்திபன், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, பூதி விக்ரம கேசரி கதாபாத்திரத்தில் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் அஸ்வின் காக்கமனு, ஷோபிதா துல்லிபலா, ரஹ்மான், அஸ்வின் ராவ், நிழல்கள் ரவி, விஜய்குமார், லால், ஜெயசித்ரா, நாசர், கிஷோர், ரியாஸ் கான், பாபு ஆண்டனி, பாலாஜி சக்திவேல், அர்ஜுன் சிதம்பரம், மகராந்த் தேஷ்பாண்டே, மோகன் ராமன், வினோதினி வைத்தியநாதன், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை பணிகளில் ஈடுபட்டுள்ள முன்னணி டிரம்ஸ் கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி அவர்கள், AM ஸ்டூடியோவில் தனது குழுவுடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகளை செய்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு தெரிவித்துள்ளார். ட்ரெண்டாகும் அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Drums Shivamani (@asivamanidrums_official)